Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு

கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு

By: Karunakaran Sat, 28 Nov 2020 3:43:22 PM

கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க 7 நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 3 நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து பரிசோதனை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் மூன்று 3 நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி இன்று நேரடியாக சென்று ஆய்வு செய்து, தடுப்பு மருந்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய திட்டமிட்டார்.

அதன்படி இன்று காலையில் குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகே உள்ள ஜைடஸ் காடிலா நிறுவன ஆலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு தடுப்பூசி உற்பத்தி பணிகளை பார்வையிட்டார். இந்த நிறுவனம் தயாரிக்கும் ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசியின் 2-வது கட்ட பரிசோதனை நடந்து வருகிறது. அதன் முன்னேற்றம் குறித்து மோடி கேட்டறிந்தார்.

hydrabad,modi,covaxin vaccine,manufacturing company ,ஹைதராபாத், மோடி, கோவாக்சின் தடுப்பூசி, உற்பத்தி நிறுவனம்

அதன்பின் இந்திய விமானப்படை விமானம் மூலம் பிரதமர் மோடி தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் சென்றார். ஹக்கிம்பேட் விமானப்படை நிலையத்தில் இறங்கிய அவர், அங்கிருந்து ஜெனோம் வேலி பகுதியில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு சென்றார். பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனாவுக்கு ‘கோவாக்சின்’ தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது.

இந்த நிறுவனம் தயாரித்து வரும் ‘கோவாக்சின்’ கொரோனா தடுப்பூசி, 3-வது கட்ட பரிசோதனையில் உள்ளது. அங்கு சென்ற பிரதமர் மோடி அதன் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். மேலும், பாரத் பயோடெக் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Tags :
|