Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராமர் கோவில் பூமி பூஜைக்காக செல்லும்முன் அனுமன் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி

ராமர் கோவில் பூமி பூஜைக்காக செல்லும்முன் அனுமன் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி

By: Karunakaran Wed, 05 Aug 2020 1:13:21 PM

ராமர் கோவில் பூமி பூஜைக்காக செல்லும்முன் அனுமன் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. அதன்பின் அங்கு ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் ஆயத்தமாகின. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, கோவில் கட்ட அறக்கட்டளை ஒன்றை மத்திய அரசு அமைத்தது. இந்நிலையில் அயோத்தியில் இன்று ராமர் கோவிலுக்கு பூமி பூஜையும், அடிக்கல் நாட்டுதல் விழாவும் நடக்க வுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் இந்த விழாவில் 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அயோத்தி செல்லும் பக்தர்கள் முதலில் அனுமன்கார்ஹி கோவில் சென்று வழிபாடு செய்த பின்பே ராமனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். ராவணனை வீழ்த்தியபின், அயோத்தி திரும்பிய ராமபிரான் அந்த இடத்தை அனுமனுக்கு கொடுத்ததால் அந்த இடம் அனுமன் கார்ஹி என்றழைக்கப்படுகிறது.

modi,hanuman temple,ram temple,bhoomi puja ,மோடி, அனுமன் கோயில், ராம் கோயில், பூமி பூஜை

இந்நிலையில் இன்று ராமர் கோவில் பூமி பூஜைக்கு செல்லும் பிரதமர் மோடி, இன்று முதலில் அனுமன் கார்ஹியில் வழிபாடு செய்தபின்னரே பூமி பூஜையில் பங்கேற்கிறார். தற்போது, தலைநகர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி லக்னோ சென்றடைந்தார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் அயோத்திக்கு சென்றார்.

அயோத்தியில் அமைந்துள்ள அனுமன்கார்ஹிக்கு முதலில் சென்று பிரதமர் மோடி வழிபாடு செய்தார். அவருடன் உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உடனிருந்தார். ராமர் கோவில் பூமி பூஜைக்காக செல்லும், பிரதமர் மோடி முன்னதாக அங்குள்ள அனுமன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.

Tags :
|