Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தாய் உடல்நிலை குறித்து அறிய மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மோடி

தாய் உடல்நிலை குறித்து அறிய மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மோடி

By: Nagaraj Wed, 28 Dec 2022 7:50:58 PM

தாய் உடல்நிலை குறித்து அறிய மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மோடி

அகமதாபாத்: மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மோடி... உடல்நலக்குறைவு காரணமாக பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீராபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, மருத்துவமனைக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது தாயாரின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் கடந்த ஜூன் மாதம் தனது 100வது பிறந்தநாளை கொண்டாடினார். சமீபத்தில் நடந்த குஜராத் சட்டசபை தேர்தலில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.


குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் செய்வதற்காக அகமதாபாத்துக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அம்மா ஹீராபெனைச் சந்தித்துப் பேசினார்.

 ,மருத்துவமனை, விசாரிப்பு, பிரதமர் மோடி, சிகிச்சை, மருத்துவர்கள்

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள ஐநா மேத்தா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஹீராபென் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, மருத்துவமனை வெளியிட்ட தகவலில், “ஹீராபென் அகமதாபாத்தில் உள்ள ஐ.நா மேத்தா மார்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. தாய் ஹீராபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனைக்குச் சென்று தாயின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

ஹீராபெனின் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் விளக்கம் அளித்தனர்.

Tags :