Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரதமர் மோடி வருகிற ஆக.26ஆம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் வாழ்த்துகிறார்

பிரதமர் மோடி வருகிற ஆக.26ஆம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் வாழ்த்துகிறார்

By: vaithegi Thu, 24 Aug 2023 10:02:12 AM

பிரதமர் மோடி வருகிற ஆக.26ஆம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் வாழ்த்துகிறார்

இந்தியா: இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி சரித்திர சாதனை படைத்து உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஜிஎஸ்எல்வி மார்க் 3 (எல்விஎம் 3) ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் கடந்த 14-ம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது, சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து உந்துவிசை கலன், லேண்டர் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி தனித்தனியாக பிரிந்தது.

இதையடுத்து தனியாக பிரிந்த லேண்டரின் உயரம் ஒவ்வொரு கட்டமாக குறைக்கப்பட்டு நிலவை நோக்கி பயணித்தது. சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் நிலவின் தென்பகுதியில் திட்டமிட்டப்படி நேற்று மாலை 6.04 மணிக்கு தரையிறங்கியது.

isro scientists,pm modi ,இஸ்ரோ விஞ்ஞானிகள்,பிரதமர் மோடி

எனவே இதன்மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து நிலவில் இந்தியா கால் பதித்தது. இந்த சூழலில் நிலவின் மேற்பரப்பில் சந்திராயன்-3 லேண்டரிலிருந்து வெளியே வந்த ரோவர் பிரக்ஞான் ஆய்வை தொடங்கியது. அடுத்த 14 நாட்களுக்கு ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு மேற்கொள்ளும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வருகிற ஆக.26ஆம் தேதி பெங்களூருவில் இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் வாழ்த்துகிறார் பிரதமர் மோடி. கிரீஸ் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நாளை மறுநாள் பெங்களூரு வருகிறார்.

Tags :