Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் இன்று நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

சென்னையில் இன்று நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

By: vaithegi Thu, 28 July 2022 06:26:39 AM

சென்னையில்  இன்று நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

சென்னை: சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. 1927-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் கவுரவமிக்க இப்போட்டி, ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுகிறது. இதில் 187 நாடுகள் பங்கேற்கின்றன. எந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையும் விட இது அதிக எண்ணிக்கையை கொண்டதாகும்.

மேலும் 6 அணிகளில் 30 வீரர்களை கொண்டு இந்த போட்டியில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அணியை இந்தியா களமிறக்குகிறது. ஜூன் 19-ந்தேதியன்று டெல்லியில் இந்திராகாந்தி தேசிய விளையாட்டரங்கில் முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடர் ஜோதி ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைமையகத்தை நோக்கி செல்வதற்கு முன்பு இந்த ஜோதி இந்தியாவில் 40 நாட்களுக்கும் அதிகமாக சுமார் 20 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு 75 முக்கியமான இடங்கள் வழியாக பயணம் செய்து சென்னை வந்து சேர்ந்திருக்கிறது.

prime minister modi,chess olympiad tournament,started ,பிரதமர் மோடி,செஸ் ஒலிம்பியாட் போட்டி,தொடங்கி

இதனை அடுத்து செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா, நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 4.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். பின் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 5.25 மணிக்கு புறப்பட்டு ஐ.என்.எஸ். அடையாருக்கு 5.45 மணிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து 5.50 மணிக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டு, விழா நடைபெறும் உள் விளையாட்டு அரங்கத்துக்கு மாலை 6 மணிக்கு வந்தடைகிறார்.

இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் இரவு 7.30 மணி வரை பங்கேற்கிறார். விழா முடிந்தவுடன் சாலை மார்க்கமாக புறப்பட்டு கிண்டி கவர்னர் மாளிகைக்கு இரவு 7.50 மணிக்கு சென்றடைகிறார். அப்போது அவரை முக்கிய பிரமுகர்கள் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி தரப்பட்டுள்ளது. இரவு கவர்னர் மாளிகையில் தங்கும் நரேந்திர மோடி, நாளை (வெள்ளிக்கிழமை) அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார். இந்த விழாவை முடித்துவிட்டு மதியம் 11.50 மணி அளவில் சென்னையில் இருந்து அவர் புறப்பட்டு செல்கிறார்.


Tags :