Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குஜராத் தொங்கு பாலம் விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி நாளை நேரில் ஆய்வு

குஜராத் தொங்கு பாலம் விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி நாளை நேரில் ஆய்வு

By: vaithegi Mon, 31 Oct 2022 3:07:27 PM

குஜராத் தொங்கு பாலம் விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி நாளை நேரில் ஆய்வு

இந்தியா: பிரதமர் மோடி நாளை நேரில் ஆய்வு ..... குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் உள்ள மோர்பி நகரில், மசசூ ஆற்றில் சாத் பூஜை விழா நடத்தப்பட்டது. இதில் கலந்துக் கொள்வதற்காக ஏராளமான மக்கள் அங்கு திரண்டு அங்குள்ள தொங்கு பாலம் வழியாக சென்றனர்.

அப்போது, பாரம் தாங்காமல் பாலம் அறுந்து ஆற்றுக்குள் விழுந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 177 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மாயமான பலரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

prime minister modi,suspension bridge ,பிரதமர் மோடி,தொங்கு பாலம்

இதையடுத்து இந்த விவகாரத்தில் பாலத்தை புதுப்பித்த பணியில் ஈடுபட்ட கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனை அடுத்து இந்நிலையில், மோர்பி தொங்கு பாலம் விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி அவர்கள் நாளை நேரில் சென்று ஆய்வு செய்கிறார். மேலும் ஆற்றில் மூழ்கி 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மீட்பு பணிகளை பார்வையிடுகிறார்.

Tags :