Advertisement

பிரதமர் மோடி வரும் 11ஆம் தேதி தமிழகம் வருகை

By: vaithegi Mon, 07 Nov 2022 10:50:30 AM

பிரதமர் மோடி வரும் 11ஆம் தேதி தமிழகம் வருகை


இந்தியா: வரும் 11ஆம் தேதி தமிழகம் வருகை .... காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, காந்திகிராம 75வது பவள விழா, வந்தே பாரத் 5-வது அதிவிரைவு ரயில் தொடக்க விழா, கெம்பேகவுடா சிலை திறப்பு விழா ஆகியவற்றின் பங்கேற்பதற்காக வரும் 11ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு மற்றும் கர்நாடகா வருகை தருகிறார்.

காந்திகிராம நிறுவனம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதை முன்னிட்டு காந்திகிராம நிறுவனத்தின் பவள விழா கொண்டாடப்படுகிறது . மேலும் அது மட்டும் அல்லாமல் காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பட்டமளிப்பு விழாவும் நடைபெற இருக்கிறது. இரு விழாக்களும் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் வரும் 11ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது.

tamil nadu,prime minister modi ,தமிழகம் ,பிரதமர் மோடி

பிரதமர் மோடி இந்த விழாக்களில் பங்கேற்று 50 பேருக்கு முனைவர் பட்டங்களையும், பல பாடப் பிரிவுகளிலும் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பட்டங்களையும் தங்க பதக்கங்களையும் வழங்குகிறார். இவ்விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆ.ர் என். ரவி, முதல்வர் மு. க .ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றார்கள்.

இந்த விழாவிற்கு வருவதற்கு முன்னதாக பெங்களூருவில் சென்னை- பெங்களூரு மைசூர் இடையேயான வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். இதனை அடுத்து அதன் பின் பெங்களூருவில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். 108 அடி உயர கெம்பே கவுடா சிலையையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

Tags :