Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரதமர் மோடி முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துகூறியுள்ளார்

பிரதமர் மோடி முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துகூறியுள்ளார்

By: vaithegi Wed, 01 Mar 2023 11:08:31 AM

பிரதமர் மோடி முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துகூறியுள்ளார்

இந்தியா: திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கொண்டு வருகின்றனர்.

இன்று காலை முதல் #HBDMKStalin70 என்கிற ஹேஷ்டேக், இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்து கொண்டு வருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

happy birthday,prime minister modi ,பிறந்தநாள் வாழ்த்து  ,பிரதமர் மோடி ,

இதனை அடுத்து இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன். எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :