Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது - அசாதுதீன் ஓவைசி

ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது - அசாதுதீன் ஓவைசி

By: Karunakaran Wed, 29 July 2020 2:24:52 PM

ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது - அசாதுதீன் ஓவைசி

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தபின், அங்கு ராமர் கோவில் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கோவில் கட்டும் பணிகளை நிர்வகிக்க 15 உறுப்பினர்களைக் கொண்ட, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. கோவில் கட்ட நன்கொடை மற்றும் கட்டுமானப் பொருட்களை பல்வேறு தரப்பினரும் இந்த அறக்கட்டளைக்கு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் வரும் 5-ம் தேதி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில், பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

modi,ram temple,bhoomi puja,azaduddin owaisi ,மோடி, ராம் கோயில், பூமி பூஜா, ஆசாதுதீன் ஒவைசி

தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த விழாவில் நேரடியாக பங்கேற்க 200 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்கக் கூடாது என அசாதுதீன் ஓவைசி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், தனது டுவிட்டர் பக்கத்தில், அரசியல் சட்டத்தின் கீழ் பதவிப் பிரமாணம் எடுத்த பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் பங்கேற்றால் அது அரசியல் சட்டத்தை மீறிய செயலாகி விடும். அரசியல் சாசனத்தின் அடிப்படை மதச்சார்பற்ற தன்மை தான் என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
|