Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலக யானைகள் தினத்தையொட்டி பிரதமர் மோடி கருத்து தெரிவிப்பு

உலக யானைகள் தினத்தையொட்டி பிரதமர் மோடி கருத்து தெரிவிப்பு

By: vaithegi Fri, 12 Aug 2022 10:39:59 AM

உலக யானைகள் தினத்தையொட்டி பிரதமர் மோடி கருத்து தெரிவிப்பு

புதுடெல்லி: ஆண்டு தோறும் ஆகஸ்ட் 12 -ம் தேதி உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. நமது சுற்றுச்சூழல் அமைப்பில் அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சர்வதேச யானைகள் தினம் அனுசரிக்கப்பட்டு கொண்டு வருகிறது.

மேலும் அவற்றின் பாதுகாப்பு மற்றும் வாழ்விடம் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதிலும் இந்த நாள் மிக முக்கியத்துவம் பெறுகிறது. இதை அடுத்து வனத்தை பாதுகாப்பதில் யானைகள் முக்கிய பங்காற்றுகின்றன. யானைகளை பாதுகாக்க உலகத்திலுள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் உலக யானைகள் தினத்தை கடைப்பிடிக்கின்றன.

elephants,prime minister modi,comment ,யானைகள் ,பிரதமர் மோடி ,கருத்து

இதனை தொடர்ந்து இந்நிலையில், உலக யானைகள் தினத்தை ஓட்டி பிரதமர் மோடி அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "உலக யானைகள் தினத்தில், யானையைப் பாதுகாப்பதில் எங்களின் நடவடிக்கைகளை மீண்டும் அதிகரிக்கிறோம். ஆசிய யானைகளில் 60% இந்தியாவில் உள்ளது.

மேலும் கடந்த 8 ஆண்டுகளில் யானைகள் காப்பகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. யானைகளைப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ள அனைவரையும் நான் மிகவும் பாராட்டுகிறேன். யானைப் பாதுகாப்பில் உள்ள வெற்றிகள், மனித-விலங்கு மோதலைக் குறைப்பதற்கும், உள்ளூர் சமூகங்களை ஒருங்கிணைத்து, சுற்றுச்சூழல் உணர்வை மேம்படுத்துவதில் பெரிய முயற்சிகளின் பின்னணியில் பார்க்கப்பட வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.

Tags :