Advertisement

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பிரதமர் மோடி இன்று உரை

By: Karunakaran Sat, 01 Aug 2020 2:44:07 PM

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பிரதமர் மோடி இன்று உரை

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் தொடர்ந்து எழுந்து வருகின்றன. கடந்த 34 ஆண்டுகளுக்குப் பின் கல்விக் கொள்கையில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து பிரதமர் மோடி இன்று மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களிடம் விளக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலுக்கு பின் பிரதமர் மோடி மக்களிடம் பலமுறை உரையாற்றி கொண்டே வருகிறார்.

prime minister speech,modi,new education policy,corona virus ,பிரதமர் பேச்சு, மோடி, புதிய கல்வி கொள்கை, கொரோனா வைரஸ்

இந்த உரையில் கொரோனா பாதிப்பு, ரபேல் போர் விமானங்கள் வருகை உள்ளிட்டவை குறித்தும் பிரதமர் மோடி உரையாடுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ரபேல் போர் விமானங்கள் போன்றவை குறித்து காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், பிரதமர் மோடி இன்று மக்களிடம் உரையாற்றலாம். புதிய கல்விக் கொள்கைக்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் மும்மொழி கல்விக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|