Advertisement

இன்று பிரதமர் மோடி அவசர ஆலோசனை

By: vaithegi Thu, 22 Dec 2022 10:47:42 AM

இன்று பிரதமர் மோடி அவசர ஆலோசனை

இந்தியா: பிரதமர் அவசர ஆலோசனை .... சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் திடீர் எழுச்சி பெற்று பரவி கொண்டு வருகிறது. இதற்கு காரணம், ஒமைக்ரானின் பிஎப்.7 துணை வைரஸ்கள்தான்.இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்றுதான் என்று சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து இந்த வைரஸ் அதிவேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது. இந்த வைரஸ், சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் போன்ற நாடுகளிலும் பரவி விட்டது. இதையடுத்து இந்த பிஎப்.7 வைரஸ், இந்தியாவிலும் நுழைந்துவிட்டது.

prime minister,advice ,பிரதமர் ,ஆலோசனை

குஜராத்தில் கடந்த அக்டோபர் மாதம் 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை குஜராத் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது. ஒடிசாவிலும் அந்த வைரஸ் ஒருவருக்கு பாதித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை மட்டும் 3 பேரை இந்த வைரஸ் பாதித்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. கொரோனா அச்சுறுத்தல் உயர்ந்து உள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார். புதிய வகை கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Tags :