Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு பொதுச்சபை கூட்டத்தில் 26-ந் தேதி பேசவுள்ள பிரதமர் மோடி

ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு பொதுச்சபை கூட்டத்தில் 26-ந் தேதி பேசவுள்ள பிரதமர் மோடி

By: Karunakaran Thu, 03 Sept 2020 1:28:43 PM

ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு பொதுச்சபை கூட்டத்தில் 26-ந் தேதி பேசவுள்ள பிரதமர் மோடி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டு பொதுச்சபை கூட்டம் வருகிற 22-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை காணொலி காட்சி மூலம் நடைபெறுவுள்ளது. கொரோனா காரணமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஐ.நா.சபையின் 75 ஆண்டுகால வரலாற்றில் ஐ.நா.சபை காணொலி காட்சி மூலம் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

உறுப்பு நாடுகளின் தலைவர்கள் யாரும் பொதுச்சபை கூட்டத்தில் நேரடியாக கலந்து கொள்ளாமல் தங்கள் நாடுகளில் இருந்த படியே வீடியோ உரை சபையில் கலந்துகொள்வர். அவ்வாறே தலைவர்களின் நிகழ்த்தும் 15 நிமிட வீடியோ ஒலிபரப்பப்படும். இந்நிலையில் இந்த கூட்டத்தில் பேசும் தலைவர்களின் தற்காலிக பட்டியலை ஐ.நா.சபை நிர்வாகம் தற்காலிகமாக வெளியிட்டுள்ளது. அதில், பிரேசியல் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ முதன் முதலாக பேசுகிறார்.

prime minister narendra modi,26th annual general meeting,united nation,new york ,பிரதமர் நரேந்திர மோடி, 26 வது ஆண்டு பொதுக் கூட்டம், ஐக்கிய நாடுகள், நியூயார்க்

இரண்டாவதாக வழக்கமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உரையாற்றுவார். மேலும், இந்த பட்டியலின்படி பிரதமர் மோடி பிரதமர் மோடி 26-ந் தேதி உரையாற்றுகிறார். பேசும் தலைவர்களின் பட்டியலில் துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன், சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல மேக்ரான் ஆகியோரும் இடம் பெற்றுள்ளன.

தற்காலிக பட்டியல் என்பதால் இன்னும் சில நாட்களில் இறுதி பட்டியல் வெளியிடப்படும். அதன்பின்னே எந்தெந்த தலைவர்கள் பேசுவார்கள் என்பது குறித்த அதிகாரபூர்வமாக தெரிய வரும். மேலும், செப்டம்பர் 30-ந் தேதி பல்லுயிர் பெருக்க உச்சி மாநாடும், அக்டோபர் 1-ந் தேதி 4-வது உலக மகளிர் மாநாடும், அக்டோபர் 2-ந் தேதி அணுஆயுத ஒழிப்பு ஆதரவு நாள் மாநாடும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :