Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆஸ்திரேலிய மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஸ்கார்ட் மோரிசன் அறிவிப்பு

ஆஸ்திரேலிய மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஸ்கார்ட் மோரிசன் அறிவிப்பு

By: Karunakaran Fri, 19 June 2020 11:42:51 AM

ஆஸ்திரேலிய மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஸ்கார்ட் மோரிசன் அறிவிப்பு

உலக நாடுகள் அனைத்தும் தற்போது கொரோனாவுக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் அரசு மற்றும் தனியார் துறையின் கணினி அமைப்பின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஸ்கார்ட் மோரிசன் தெரிவித்துள்ளார். கொரோனா விவகாரத்தில் ஆஸ்திரேலியா - சீனா இடையே மோதல் நிலவி வரும் நிலையில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியான தகவலில், இந்த தாக்குதல் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டுள்ளதாகவும், இது எப்போது தொடங்கியது என்ற தகவல் வெளியாகவில்லை எனவும், அந்நாட்டின் அரசு மற்றும் தனியார் துறைகளின் முக்கிய தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

scart morrison,australia,cyber attack,information hacked ,ஸ்கார்ட் மோரிசன், சைபர் தாக்குதல்,ஆஸ்திரேலியா,தகவல் ஹேக்கிங்

மேலும், அரசு மற்றும் தனியாரின் இணையதள பக்கங்களுக்குள் ஹேக்கர்கள் நுழைந்துள்ளதாகவும், முக்கியமான உள்கட்டமைப்பு, அரசின் திட்டங்கள், கொள்கை முடிவுகள், முதலீடு போன்றவை தொடர்பான பல்வேறு தகவல்களை திருடி இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் ஸ்கார்ட் மோரிசன் கூறுகையில், தற்போதுவரை சைபர் தாக்குதல் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது. அதை சரிசெய்ய தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சைபர் தாக்குதலுக்கு ஒரு நாடு பின்னனியில் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.கொரோனா விவகாரத்தில் ஆஸ்திரேலியா - சீனா இடையே மோதல் நிலவி வருவதால், அவர் சீனாவை மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார்.

Tags :