Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டுக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் ஷபாஸ் ஷெரீப்

நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டுக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் ஷபாஸ் ஷெரீப்

By: Nagaraj Wed, 25 Jan 2023 10:12:13 PM

நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டுக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் ஷபாஸ் ஷெரீப்

லாகூர்: பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டுக்கு அந்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

லாகூரில் பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பாகிஸ்தானில் உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தான் முழுவதும் திடீரென மின்தடை ஏற்பட்டது.

தேசிய மின் விநியோக கட்டமைப்பில் மின் விநியோகத்தில் அதிர்வெண் மாறுபாடு ஏற்பட்டது. இதனால், மின் விநியோகம் முழுவதும் செயலிழந்தது. இதனால், நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.

குறைந்த பயன்பாடு காரணமாக எரிபொருள் செலவை மிச்சப்படுத்த அதிகாரிகள் மின் விநியோக உள்கட்டமைப்பின் சில பகுதிகளை மூடியுள்ளனர்.

apologized,power cut,president of pakistan, ,பாகிஸ்தான் பிரதமர், மன்னிப்பு, மின்தடை

இந்த அமைப்புகள் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தபோது, மின் விநியோகத்தில் ஏற்பட்ட ஏற்ற இறக்கம் காரணமாக மின் விநியோக முறை செயலிழந்து நாடு முழுவதும் மின் விநியோகம் தடைபட்டது.

இந்த மின்வெட்டால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். மின்வெட்டு காரணமாக பல்வேறு நகரங்களில் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மின் விநியோகத்தை சீரமைக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தீவிர முயற்சிகளுக்குப் பிறகு, நாட்டின் சில பகுதிகளில் படிப்படியாக மின் விநியோகம் சீரமைக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் பல பகுதிகளில் இன்னும் மின் விநியோகம் செய்யப்படவில்லை. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இன்று நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டுக்கு அந்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.

இதுகுறித்து ஷெரீப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, நேற்றைய தடையால் நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளுக்கு எனது அரசு சார்பில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். எனது உத்தரவின் பேரில் மின்வெட்டுக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது,” என்றார்.

Tags :