Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ்நாட்டு நலன் சார்ந்த திட்டங்களுக்கு அனுமதிதரவும், கூடுதல் நிதி ஒதுக்கி தருமாறு .. மோடியிடம் இன்று முதல்-அமைச்சர் மனு

தமிழ்நாட்டு நலன் சார்ந்த திட்டங்களுக்கு அனுமதிதரவும், கூடுதல் நிதி ஒதுக்கி தருமாறு .. மோடியிடம் இன்று முதல்-அமைச்சர் மனு

By: vaithegi Wed, 17 Aug 2022 12:18:13 PM

தமிழ்நாட்டு நலன் சார்ந்த திட்டங்களுக்கு அனுமதிதரவும், கூடுதல் நிதி ஒதுக்கி தருமாறு ..   மோடியிடம் இன்று முதல்-அமைச்சர் மனு

சென்னை: புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து சொல்வதற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்றிரவு டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று காலையில் இருவரையும் தனித்தனியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்த பிறகு மாலையில் பிரதமர் மோடியையும் சந்தித்து பேச முடிவு செய்துள்ளார்.

இதை அடுத்து அவருக்கு பிரதமரின் இல்லத்தில் மாலை 4.30 மணிக்கு சந்தித்து பேச நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலையில் பிரதமர் மோடியை சந்திக்கும் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் சர்வதேச செஸ் போட்டியை நடத்துவதற்கு அனுமதி தந்ததற்கு நன்றி தெரிவிக்கிறார்.

இதனை தொடர்ந்து அதன் பிறகு தமிழ்நாட்டு நலன் சார்ந்த திட்டங்களுக்கு அனுமதிதரவும், கூடுதல் நிதி ஒதுக்கி தருமாறும் விரிவான மனு அளிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.9,602 கோடி ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை விரைந்து தருமாறும் அப்போது வலியுறுத்துவார்.

prime minister modi,m.k.stalin,manu ,பிரதமர் மோடி,மு.க.ஸ்டாலின்,மனு

மேலும் அதுமட்டுமல்லாமல் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதால் மசோதா மீது விரைந்து முடிவெடுத்து ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பவும் தேவையான நடவடிக்கைகளை பல எடுக்குமாறு பிரதமரிடம் கேட்டுக் கொள்வார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனவே இதனால் பிரதமர் மோடியுடனான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பு முடிந்ததும் இன்றிரவு 8 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்னை வந்து வந்தடைகிறார்.

Tags :