Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரதமர் வருகை .. மத்திய பிரதேசத்தில் சில பள்ளிகளுக்கு விடுமுறை

பிரதமர் வருகை .. மத்திய பிரதேசத்தில் சில பள்ளிகளுக்கு விடுமுறை

By: vaithegi Mon, 25 Sept 2023 4:13:03 PM

பிரதமர் வருகை ..  மத்திய பிரதேசத்தில் சில பள்ளிகளுக்கு விடுமுறை

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பள்ளிகள் மூடப்பட்டு தேர்வு ஒத்திவைப்பதாகவும் அரசு அறிவிப்பு ..மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் பாஜக தொண்டர்களின் மகாகும்ப் நிகழ்ச்சி இன்று நடைபெறகிறது. அதில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார்.

அதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை மாற்றுப்பாதை காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்படும். எனவே அதனை கருத்தில் கொண்டு சில பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

holiday,pratham,madhya pradesh ,விடுமுறை,பிரதமர் ,மத்திய பிரதேசம்


அதே போன்று பல பள்ளிகளில் செப்.25ம் தேதி முதல் தேர்வுகள் நடைபெற இருந்தது. ஆனால் தற்போது விடுமுறை அறிவிப்பை முன்னிட்டு இத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இது குறித்த அறிவிப்பை பெற்றோர்களுக்கு பள்ளிகள் தெரிவித்துள்ளன.

ஆனால் அரசு பள்ளிகள் தங்களுடைய மாணவர்களுக்கு இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை அதனால் அவை எந்தவித மாற்றமும் இல்லாமல் வழக்கம் போன்று செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :