Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 67 ஆண்டு காலம் வகித்து வந்த ராணுவ பொறுப்பை தனது மருமகளுடம் ஒப்படைத்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்

67 ஆண்டு காலம் வகித்து வந்த ராணுவ பொறுப்பை தனது மருமகளுடம் ஒப்படைத்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்

By: Karunakaran Fri, 24 July 2020 12:45:18 PM

67 ஆண்டு காலம் வகித்து வந்த ராணுவ பொறுப்பை தனது மருமகளுடம் ஒப்படைத்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்

இங்கிலாந்து நாட்டில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர், இளவரசர் பிலிப் ஆவார். இவருக்கு தற்போது 99 வயதாகிறது. இவர் எடின்பரோ கோமகன் என்று அழைக்கப்பட்டு வந்தார். அதனடிப்படையில், அவர் 67 ஆண்டு காலமாக இங்கிலாந்து ராணுவத்தின் மிகப்பெரிய காலாட்படையான ரைபிள் படையின் தலைமை கர்னல் என்ற ராணுவ பொறுப்பை வகித்து வந்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு வயோதிகம் காரணமாக பொது வாழ்க்கையில் இளவரசர் பிலிப் இருந்து வந்தார். அதன்பின் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது, நேற்று முன்தினம் விண்ட்சர் கோட்டையில் நடந்த ராணுவ விழாவில் அவர் ராணுவ பொறுப்பில் இருந்து முறைப்படி விலகினார்.

prince philip,england,daughter-in-law,military service ,இளவரசர் பிலிப், இங்கிலாந்து, மருமகள், ராணுவ சேவை

ராணுவ பொறுப்பில் இருந்து முறைப்படி விலகிய இளவரசர் பிலிப், அந்த பொறுப்பை தனது மருமகளும், இளவரசர் சார்லஸ்சின் மனைவியுமான கமிலாவிடம் ஒப்படைத்தார். இதனால் கமிலா, கார்ன்வால் கோமகள் என்று அழைக்கப்படுகிறார்.

கொரோனா வைரஸ் காரணமாக, இந்த விழா தனிமனித இடைவெளியை பின்பற்றி அதற்கேற்றவாறு எளிமையாக நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய இளவரசர் பிலிப், தான் 67 ஆண்டு காலம் ராணுவ பொறுப்பு வகித்து சேவையாற்ற வழங்கிய வாய்ப்புக்கு நன்றி என்று கூறினார்.


Tags :