Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக ரேஷன் கடைகள் எவ்வாறு செயல்படுகின்றன , ஏதேனும் குறைபாடுகள் இருக்கிறதா என கூட்டுறவுத் துறை முதன்மைச் செயலர் ஆய்வு

தமிழக ரேஷன் கடைகள் எவ்வாறு செயல்படுகின்றன , ஏதேனும் குறைபாடுகள் இருக்கிறதா என கூட்டுறவுத் துறை முதன்மைச் செயலர் ஆய்வு

By: vaithegi Sat, 20 Aug 2022 2:13:12 PM

தமிழக ரேஷன் கடைகள் எவ்வாறு செயல்படுகின்றன , ஏதேனும் குறைபாடுகள் இருக்கிறதா என கூட்டுறவுத் துறை முதன்மைச் செயலர் ஆய்வு

சென்னை: தமிழக அரசின் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு மலிவு விலையில் அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் முதலான பல்வேறு உணவு பொருள்கள் வழங்கப்பட்டு கொண்டு வருகிறது.

அதன் படி தரமான உணவு பொருள்கள் வழங்கப்படுகிறதா என்பது பற்றி அடிக்கடி ஆய்வு நடத்தப்பட்டு கொண்டு வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் பொருள்கள் சரியாக வழங்கப்படவில்லை என்று குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில் அது குறித்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ரேஷன் பொருட்களை சிந்தாமல் பொது மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும், கீழே சிந்தும் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

inspection,ration shops ,ஆய்வு  ,ரேஷன் கடைகள்

இந்த நிலையில் ரேஷன் கடைகள் தூய்மையாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் தகுதி வாய்ந்தவர்களுக்கு ரேஷன் பொருள்கள் சரியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் எவ்வாறு செயல்படுகின்றன எனவும், ரேஷன் கடைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கிறதா என்பது பற்றி கூட்டுறவுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் இன்று ஆய்வு நடத்தினார்.முதற்கட்டமாக சென்னை அடையாறில் உள்ள 2 ரேஷன் கடைகளில் இன்று ஆய்வு செய்யப்பட்டது.

Tags :