Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தனியார் பேருந்துகள் இயக்கம் இல்லை; உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

தனியார் பேருந்துகள் இயக்கம் இல்லை; உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

By: Nagaraj Mon, 31 Aug 2020 5:54:31 PM

தனியார் பேருந்துகள் இயக்கம் இல்லை; உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பொது முடக்கத்தால் கடந்த 5 மாதங்களாக இயங்கப்படாமல் இருந்த போக்குவரத்து துறைக்கு தற்போது விடுதலை கிடைத்துள்ளது. குறிப்பாக சென்னையில் மக்கள் கூட்ட நெரிசலில் அசந்து செல்லும் பேருந்துகளை காணவும், பயணிக்கவும் பலரும் ஆவலுடன் காத்திருப்பர்.

அந்த வகையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 50 சதவீத இருக்கைகளுடன் நாளை முதல் பேருந்துகள் இயங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 22 ஆயிரம் பேருந்துகள் இயங்கப்படவுள்ளது. அதற்கான பணிகளும் தற்போது தொடங்கியுள்ளன.

private bus,not running,demand,50 per cent,district ,தனியார் பேருந்து, இயங்காது, கோரிக்கை, 50 சதவீதம், மாவட்டம்

இந்நிலையில் தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க மாநில செயலாளர் தர்மராஜ், ‘மாவட்டத்திற்குள் மட்டுமே இயக்கினால் லாபம் கிடைக்காது என்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி தந்தால் மட்டுமே தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

50 சதவீத இருக்கைகள் என்றில்லாமல் இருக்கைகள் அனைத்தையும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
|