Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 4 மாவட்டங்களை தவிர்த்து பிற இடங்களில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயங்கும்

4 மாவட்டங்களை தவிர்த்து பிற இடங்களில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயங்கும்

By: Monisha Tue, 09 June 2020 4:52:07 PM

4 மாவட்டங்களை தவிர்த்து பிற இடங்களில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயங்கும்

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 17,527 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 286-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23,298 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க ஜூன் 30-ந்தேதி வரை 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டதுடன் அரசு பேருந்துகள் இயங்கவும் அரசு அனுமதி அளித்தது.

tamil nadu,corona virus,stage 5 curfew,government buses,private buses ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,5ம் கட்ட ஊரடங்கு,அரசு பேருந்துகள்,தனியார் பேருந்துகள்

இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் தனியார் பேருந்துகள் ஓடும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க செயலாளர் தர்மராஜ் அறிவித்துள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற இடங்களில் தனியார் பேருந்துகள் இயங்கும். குறிப்பிட்ட மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் அரசின் விதிகளை பின்பற்றி 4,400 தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags :