Advertisement

இங்கு நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Thu, 22 June 2023 3:16:00 PM

இங்கு  நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை :புதுக்கோட்டையில் நாளை வேலைவாய்ப்பு முகாம் .... தமிழகம் முழுவதும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக அரசு அதிக முதலீடுகளை ஈர்த்து, தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து கொண்டு வருகிறது.

எனவே இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்து, வேலையில்லா திண்டாட்டம் குறையும். அரசு துறை பணிகளுக்கு மாவட்டம் தோறும் உள்ள மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் முகாம்கள் நடத்தப்பட்டு, பணி நியமனம் அளிக்கப்படுகிறது.

employment camp,pudukottai ,வேலைவாய்ப்பு முகாம்,புதுக்கோட்டை

இது போன்று, தனியார் துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு, அரசு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை ஏற்பாடு செய்கிறது. அந்த வகையில், நாளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10:30 மணி முதல் நடக்கவுள்ளது.

இதையடுத்து இதில், 18 முதல் 30 வயதுக்குட்பட்ட 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம். மேலும், இந்த முகாமிற்கு வரும் நபர்கள் தங்கள் கல்வி மற்றும் அடையாள ஆவணங்களை எடுத்து வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்து உள்ளார்.

Tags :