Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெரம்பலூரில் ஜூன் 25ம் தேதி... தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூரில் ஜூன் 25ம் தேதி... தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Mon, 20 June 2022 8:38:48 PM

பெரம்பலூரில் ஜூன் 25ம் தேதி... தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூர் :தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற நிலையை உருவாக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வருகிறது. இதையடுத்து பல்வேறு இடங்களில் அரசு சார்பாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் மூலமாக பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பணி நியமனம் பெற்றுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக ஜூன் 25ம் தேதி அன்று பெரம்பலூரில் தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இம்முகாம் தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் கூறியிருப்பதாவது, இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் தொழிலாளர் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறையின் சார்பாக பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

employment camp,youth,skills development department ,வேலைவாய்ப்பு முகாம்  ,இளைஞர்கள் ,திறன்மேம்பாட்டுத்துறை

இதில் படித்த இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்ற அனைவரும் கலந்து கொள்ளலாம். அத்துடன் இதில் அவர்களின் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் வழி வகை செய்யப்பட உள்ளன என்று அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் இந்த வேலைவாய்ப்பு முகாம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவித்துள்ளார். முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு குடிநீர் , கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைத்திட வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான வேலைகளை தேர்வு செய்து பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags :
|