தாராபுரத்தில் நாளை மறுநாள் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
By: Nagaraj Tue, 31 Oct 2023 2:11:15 PM
திருப்பூர்: வேலை வாய்ப்பு முகாம்... தமிழகத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் நவம்பா் 2-ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வேலைவாய்ப்பு முகாமில் 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆயிரக்கணக்கில் பணியிடங்களை நிரப்ப உள்ளன.
மேலும், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ உள்ளிட்ட அனைத்து கல்வி தகுதி பெற்றவர்களும் கலந்துகொள்ளலாம் என்பதால் விருப்பம் உள்ளவர்கள் நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளும்படி மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.
இதனை அடுத்து இந்த வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய 0421-2999152, 9499055944 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.