Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தனியார் பள்ளி நிறுவனங்கள் பள்ளி தொடங்கிய உடனே கல்வி கட்டணம் கேட்டு தொந்தரவு செய்ய கூடாது ……அமைச்சர் அன்பில் மகேஷ்

தனியார் பள்ளி நிறுவனங்கள் பள்ளி தொடங்கிய உடனே கல்வி கட்டணம் கேட்டு தொந்தரவு செய்ய கூடாது ……அமைச்சர் அன்பில் மகேஷ்

By: vaithegi Mon, 13 June 2022 9:50:30 PM

தனியார் பள்ளி நிறுவனங்கள் பள்ளி தொடங்கிய உடனே கல்வி கட்டணம் கேட்டு தொந்தரவு செய்ய கூடாது ……அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகம் : தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஆன்லைன் மூலமாக தான் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பின் ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்ததுமே பழையபடி பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன.

மேலும், இரண்டு ஆண்டுகள் கழித்து இந்தாண்டு தான் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு சரியாக பாடங்கள் நடத்தாத காரணத்தினால் மாணவர்களின் கடும் சிரமத்தை குறைக்க 35% வரைக்கும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.இதனை தொடர்ந்து கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.


schools,curriculum,students ,பள்ளிகள் ,பாடத்திட்டம்,மாணவர்கள்

இந்நிலையில், நேற்று சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற லிங்க் இந்தியா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டு பேசினார். அந்த நிகழ்ச்சியில், தனியார் பள்ளி நிறுவனங்கள் மாணவர்களிடம் உடனடியாக பள்ளி கட்டணத்தை கட்டும்படி வற்புறுத்த கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், பள்ளி கட்டணம் கேட்டு தொந்தரவு செய்யும் பள்ளி நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், இன்னும் 20 நாட்களுக்குள் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரத்திற்கு ஒருநாள் அனுபவப் பகிர்வு, நீதிபோதனை பாடவேளைக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பாடவேளைக்கு சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் பொறுப்பேற்று மாணவர்களின் மனநலன் சார்ந்து தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது

Tags :