Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இங்கு நாளை தனியார் பள்ளி ஆசிரியர் வேலைவாய்ப்பு முகாம்

இங்கு நாளை தனியார் பள்ளி ஆசிரியர் வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Sat, 01 Apr 2023 5:08:25 PM

இங்கு நாளை தனியார் பள்ளி ஆசிரியர் வேலைவாய்ப்பு முகாம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் நாளை தனியார் பள்ளிகளுக்கான ஆசிரியர் பணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்க இருப்பதாக தகவல் ...

தமிழக அரசு, மாவட்டம் தோறும் அரசு துறைகளில் உள்ள பணியிடங்களில் ஆட்களை நியமனம் செய்ய மாவட்ட வேலைவாய்ப்பு வழிகாட்டும் மையம் மூலமாக முகாம்களை நடத்தி வருகிறது. இதைத்தவிர தனியார் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தனியார் துறைகளுக்கென்று தனியாக வேலைவாய்ப்பு முகாம்களையும் நடத்தி கொண்டு வருகிறது.

அந்த வகையில், நாளை மதுரை விரகனூரில் உள்ள வேலம்மாள் CBSE பள்ளியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.TAMILNADU PRIVATE SCHOOL TEACHERS RECRUITMENT ASSOCIATION மூலம் நடத்தப்படும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் 40 க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கின்றது.

employment camp,madurai ,வேலைவாய்ப்பு முகாம்,மதுரை

இவ்வேலைவாய்ப்பு முகாமில் இளங்கலை, முதுகலை, B.Ed., M.Ed., M.Phil, BE, ME, BTECH, MTECH முடித்தவர்களும், BE, ME, B. tech, MTech மற்றும் கல்வியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் நடக்கும் நேர்முகத்தேர்விற்கு தேவையான ஆவணங்களுடன் நேரில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வேலைவாய்ப்பு முகாமிற்கு விண்ணப்ப மற்றும் நுழைவு கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து காலை 9 மணி முதல் 4 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடக்க இருப்பதாகவும், மேலும், அதிக தகவல்களை 8248470862, 9442568675 என்ற தொலைபேசி எண் மூலம் கேட்டறிந்து கொள்ளலாம்.

Tags :