Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காஞ்சிபுரத்தில் டிச.02 ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரத்தில் டிச.02 ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Wed, 29 Nov 2023 4:09:20 PM

காஞ்சிபுரத்தில் டிச.02 ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


காஞ்சிபுரம் : முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்பு ...தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் நோக்கில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பாக கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு கொண்டு வருகிறது.

அந்த வகையில் டிச.02 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளது. முகமானது பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.

employment camp,kanchipuram ,வேலைவாய்ப்பு முகாம் ,காஞ்சிபுரம்

இதனை அடுத்து இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் டிகிரி, டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்து முடித்து வேலை தேடுபவர்கள் முகாமில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமிற்கு வருகை புரியவுள்ளவர்கள் கல்வி தகுதி சான்றிதழ் மாற்று பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தை எடுத்து வர வேண்டும்.மேலும் இந்த வேலைவாய்ப்பு முகாம் குறித்த விவரங்களுக்கு 044-27237124 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


Tags :