Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவையில் வருகிற டிச.2-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோவையில் வருகிற டிச.2-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Tue, 28 Nov 2023 4:33:13 PM

கோவையில் வருகிற டிச.2-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோவை : கோவை மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் சார்பில் கோவை நிர்மலா கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 2-ம் தேதி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் மோ.ஷர்மிளா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதையடுத்து இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், 250-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்துக்காக 20 ஆயிரத் திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.

employment camp,coimbatore ,வேலைவாய்ப்பு முகாம்,கோவை


அந்த வகையில் எட்டாம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப் படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழில் கல்வி பயின்றவர்கள், செவிலியர்கள், பொறியியல் மாணவர்கள் என அனைத்து பிரிவினரும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.

இந்த முகாமில் வேலை வாய்ப்பு பெறுபவர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது. மேலும் விவரங்களுக்கு 94990 55937 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :