Advertisement

இங்கு ஜூன் 23ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Wed, 21 June 2023 3:04:04 PM

இங்கு ஜூன் 23ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு : தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதந்தோறும் 2-வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கொண்டு வருகிறது. அந்த வகையில் வருகிற ஜூன் 23-ம் தேதி செங்கல்பட்டு அரசு ஐடி வளாகத்தில் தனியார் மைக்ரோ வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற இருக்கும் இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/342306190002 என்கிற இணையதள பக்கத்தின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

employment camp,chengalpattu , வேலைவாய்ப்பு முகாம் ,செங்கல்பட்டு

இதையடுத்து இந்த வேலைவாய்ப்பு முகாமில் யூரோ அளவுத்திருத்த நுட்பத்தில் காலியாக உள்ள 5 காலி பணியிடங்களும், வென்ச்சுரா செக்யூரிடீஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 15 பணியிடங்களும், கோகுயோ கேம்லின் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 3 பணியிடங்களும் என பல காலி பணியிடங்கள் இந்த முகாமின் மூலமாக நிரப்பப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே, இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ என அனைவரும் கலந்து கொண்டு தங்களுக்கான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :