Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாமக்கலில் வருகிற ஜூலை 7ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கலில் வருகிற ஜூலை 7ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Tue, 04 July 2023 4:21:55 PM

நாமக்கலில் வருகிற ஜூலை 7ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் : தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களின் வசதிக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு கொண்டு வருகிறது.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களின் வசதிக்காக வருகிற ஜூலை 7ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

இதையடுத்து இம்முகாமில் வெளி மாநிலங்களிலிருந்தும் பல நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும் இம்முகாமில் 10ம் வகுப்பு முதல், பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

employment camp,namakkal , வேலைவாய்ப்பு முகாம் ,நாமக்கல்


இந்த முகாம் வருகிற ஜூலை 7ம் தேதி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் உமா அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

எனவே வேலை தேடும் இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :