Advertisement

தருமபுரியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Thu, 16 Feb 2023 6:37:44 PM

தருமபுரியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரி: ஆட்சியர் சாந்தி அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தனியார்துறை நிறுவனங்களும் - தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துகொள்ளும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதத்தின் 3-ம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

எனவே, தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணியே ஆகும்.எனவே இதன் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. அரசுத்துறைகளில் அவர்களது பதிவு மூப்பின்படி நேர்முகத்தேர்வு அனுப்பப்படும்.

employment camp,dharmapuri ,வேலைவாய்ப்பு முகாம் ,தருமபுரி

இதையடுத்து இந்த முகாமில், பல தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு, விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்சிக்யூட்டிவ், சூப்பர்வைசர், மேலாளர், கம்பியூட்டர் ஆபரேட்டர், தட்டச்சர், அக்கவுண்டன்ட், கேசியர், மெக்கானிக் ஆகிய பணிகளுக்கு, தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். பள்ளிப்படிப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு என அனைத்துவித கல்வித்தகுதிக்கும் ஆட்கள் தேவை என்று தனியார்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஆகவே, மேற்படி பணிகளுக்கு, தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும் நாளை காலை 10 மணிக்கு, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைவெற உள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என அவர் தெரிவித்துள்ளார்.

Tags :