Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுரை மாவட்டத்தில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

மதுரை மாவட்டத்தில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Thu, 25 Aug 2022 1:40:12 PM

மதுரை மாவட்டத்தில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

மதுரை : கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தால் வேலைவாய்ப்பு முகாம் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு பாதிப்புகள் குறைந்து வந்ததை அடுத்து தற்போது அரசு அனுமதியுடன் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம் நடந்து கொண்டு வருகிறது.

அதன்படிநாளை மதுரை மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

private sector employment camp,madurai ,தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்,மதுரை

இதையடுத்து இந்த முகாமானது கே. புதூரில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர்.

மேலும் இந்த நிறுவனங்கள் கல்வி தகுதிகளுக்கு ஏற்ப ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் 8ம் வகுப்பு முதல் முதுகலை பட்டம் பெற்றவர்கள் வரை பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமிற்கு வரும் வேலை நாடுநர்கள் தங்களின் ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :