Advertisement

நாளை முதல் தொடங்குகிறது தனியார் ரயில் சேவை

By: Nagaraj Mon, 13 June 2022 9:56:51 PM

நாளை முதல் தொடங்குகிறது தனியார் ரயில் சேவை

கோவை: முதல் தனியார் ரயில் சேவை... இந்திய ரயில்வே துறையின் பாரத் கவுரவ் திட்டத்தின் முதல் தனியார் ரெயில் தமிழகத்தின் கோவையிலிருந்து தனது முதல் சேவையை நாளை 14ம் தேதி தொடங்குகிறது

இந்த சிறப்பு ரயில் நாளை ஜூன் 14 அன்று கோவையிலிருந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி வரை செல்கிறது. இது முழுக்க முழுக்க தனியார் சார்பில் இயக்கப்படும் சேவை ஆகும்.

கோவையிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, எலகங்கா, தர்மாவரம், மந்த்ராலயம், வாடி வழியாக, ஷீரடியை சென்றடையும். கோவையில் இருந்து 14.06.22 அன்று மாலை 6 மணிக்கு புறப்பட்டு 16.06.2022 அன்று காலை 7.25க்கு ஷீரடி செல்லும் ரயில், மறுநாள் 17.6.2022 அன்று காலை 7.25க்கு சாய்நகர் ஷீரடியிலிருந்து புறப்பட்டு கோவைக்கு 18.06.2022 நண்பகல் 12.00 மணிக்கு வந்து சேரும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

railway,department,private service,coimbatore,tiruppur,erode ,ரயில்வே, துறை, தனியார் சேவை, கோவை, திருப்பூர், ஈரோடு

இந்திய ரயில்வே துறையின் முதல் தனியார் ரெயில் கோவையிலிருந்து 14.06.22 அன்று மாலை 6 மணிக்கு புறப்படும். திருப்பூருக்கு 7 மணி ஈரோடு 8 மணி, சேலம் 9.15, (15.6.2022) அன்று ஜோலார்பேட்டை இரவு 00.10, எலகங்கா விடியற் காலை 5 மணிக்கும், தர்மாவரம் 6.20, மந்த்ராலயம் ரோடு 11.00 மணிக்கும், மாலை 4.00 மணிக்கு மந்த்ரா ரோட்டிலிருந்து புறப்பட்டு வாடி இரவு 7.15க்கும், சென்று ஜூன் 16-ம் தேதி காலை 7.25க்கு ஷீரடியை சென்றடையும்.

அதேபோல் 17.6.2022 அன்று காலை 7.25 க்கு ஷீரடியிலிருந்து புறப்பட்டு வாடி ரெயில் நிலையத்திற்கு மாலை 4.30 க்கும், தர்மாவரத்திற்கு இரவு 11.10க்கும், எலங்காவிற்கு 18.6.2022 காலை 2.10க்கும், ஜோலார்பேட்டைக்கு காலை 5.55க்கும், சேலம் 7.30க்கும், ஈரோடு 8.30க்கும், திருப்பூர் 10.25க்கும், கோவைக்கு நண்பகல் 12.00 மணிக்கு வந்து சேரும் .

Tags :