Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆன்லைன் வகுப்புகளால் வெளிநாட்டு மாணவர்களுக்கு சிக்கல்; விசாக்கள் ரத்து செய்யப்படும் என அறிவிப்பு

ஆன்லைன் வகுப்புகளால் வெளிநாட்டு மாணவர்களுக்கு சிக்கல்; விசாக்கள் ரத்து செய்யப்படும் என அறிவிப்பு

By: Nagaraj Tue, 07 July 2020 1:51:30 PM

ஆன்லைன் வகுப்புகளால் வெளிநாட்டு மாணவர்களுக்கு  சிக்கல்; விசாக்கள் ரத்து செய்யப்படும் என அறிவிப்பு

அமெரிக்க பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கினால் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கல்வி விசாக்கள் ரத்து செய்யப்படும் என குடியுரிமைத்துறை தெரிவித்துள்ளது. இதனால் இந்திய மாணவர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

அமெரிக்காவில் வேலைவாய்ப்புக்காக மட்டுமின்றி உயர்கல்வி மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த கல்விக்கும் ஏரளாமான வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பயின்று வருகின்றனர். இதில் அதிகமாக சீனா, இந்தியா, தென் கொரியா, சவுதி அரேபியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்தே அதிக அளவிலான மாணவர்கள் ஆண்டு தோறும் வருகை தருகின்றனர்.

இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை மற்றும் வருகை தடைபட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் பயின்றுவரும் மற்றும் அமெரிக்கா செல்ல விண்ணப்பித்துள்ள வெளிநாட்டு மாணவர்கள் நடப்பாண்டு கல்வி குறித்து குழப்பத்தில் உள்ளனர்.

இதனிடையே 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் கொரோனா பாதிப்புகள் குறையாத காரணத்தினால் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த தொடங்கியுள்ளன. இந்நிலையில் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கினால், வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கல்வி விசாக்கள் ரத்து செய்யப்படும் என அமெரிக்க குடியுரிமைத்துறை தெரிவித்துள்ளது.

foreign,students,usa,online education,trauma ,வெளிநாட்டு, மாணவர்கள், அமெரிக்கா, ஆன்லைன் கல்வி, அதிர்ச்சி

இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க குடியுரிமைத்துறை அதிகாரிகள், வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டால் வெளிநாட்டு மாணவர்கள் நாட்டில் தங்க அனுமதி இல்லை, அதுவும் "முழுக்க முழுக்க ஆன்லைனில் இயங்கும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் எஃப் -1 மற்றும் எம் -1 மாணவர்கள் அமெரிக்காவில் தங்கியிருக்க அனுமதிக்கப்படமாட்டாது என தெரிவித்துள்ளனர்.

தற்போது அமெரிக்காவில் இத்தகைய பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டு பயின்று வரும் மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது சட்டபூர்வமான நிலையில் இருக்க தனிப்பட்ட அறிவுறுத்தலுடன் ஆன்லைன் அல்லாத பல்கலைக்கழங்களுக்கு மாறிக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இல்லையென்றால், அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளைத் தொடங்குவது மட்டுமின்றி குடியேற்றம் ரீதியிலான விளைவுகளையும் அவர்கள் எதிர்கொள்ளக்கூடும் என தெரிவித்துள்ளனர். மேலும் நடப்பாண்டு ஆன்லைன் கல்விக்கு புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்வி விசாக்களை அமெரிக்க வெளியுறவுத்துறை வழங்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உட்பட சில பல்கலைக்கழங்கள் அனைத்து வகுப்புகளும் ஆன்லைனில் நடத்தப்படும் என்று கூறியுள்ள நிலையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வெளிநாட்டு மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|