Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

By: vaithegi Fri, 30 Dec 2022 7:18:47 PM

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

சென்னை: பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் ..... 2023ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடும் கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது. மேலும் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதனை அடுத்து இக்கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து விரிவாக பார்ப்போம். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நாளை மாலை 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை சிறப்பு உரிமத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

instructions,new year ,வழிமுறைகள்,புத்தாண்டு

இதே போன்று கேளிக்கை விடுதி, ஸ்டார் ஓட்டல்கள், மதுபான விற்பனை உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவு 1 மணி வரை கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரங்கத்திற்குள் 80% நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று நீச்சல் குளத்தின் மீது அல்லது அருகில் தற்காலிக மேடைகள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்துடன் நீச்சல் குளங்களை நாளை மாலை 6 மணி முதல் புத்தாண்டு அன்று அதிகாலை 6 மணி வரை மூடி வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்பை கருதி நாளை இரவு 8 மணிக்கு மேல் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட சாந்தோம், மெரினா, நீலாங்கரை, பெசன்ட்நகர் எலியட்ஸ்,காசிமேடு, பாலவாக்கம், திருவொற்றியூர் உள்ளிட்ட அனைத்து கடற்கரை மணற்பகுதிகள் மற்றும் கடற்கரை ஓரங்களில் பொதுமக்கள் செல்ல தடை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து பட்டாசு வெடிக்க, கேளிக்கை நடனங்களுக்கும் தடை என உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் கஞ்சா, போதை மருந்து உள்ளிட்ட போதைப்பொருட்களை உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags :