Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தயாரிப்பாளர் சங்க தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்

தயாரிப்பாளர் சங்க தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்

By: Nagaraj Mon, 23 Nov 2020 09:50:16 AM

தயாரிப்பாளர் சங்க தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்

தயாரிப்பாளர் சங்க தேர்தல் வாக்குகள் எண்ணப்படுகிறது... திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன.

அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. டி.ராஜேந்தர் – தேனாண்டாள் முரளி தலைமையில் 2 அணிகள் தயாரிப்பாளர் சங்க தேர்தல் களத்தில் உள்ளனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு சுயேட்சையாக பி.எல். தேனப்பன் போட்டியிட்டுள்ளார். தேர்தலில் ஆயிரத்து 303 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் ஆயிரத்து 50 பேர் வாக்களித்தனர்.

producers,votes,counting work,this morning ,தயாரிப்பாளர்கள், வாக்குகள், எண்ணும் பணி, இன்று காலை

தலைவர், பொருளாளர், 2 துணை தலைவர்கள், 2 செயலாளர்கள், 21 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 112 பேர் போட்டியிட்டுள்ளனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. சென்னை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் காலை 8 மணிமுதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இதில் டிஆர் அணியினர் வாக்குக்கு பணம் மற்றும் தங்க நாணயம் அளிப்பதாக புகார் எழுந்தது. மேலும் இத்தேர்தலில் ரஜினிகாந்த், தனுஷ், பாரதிராஜா உள்ளிட்டோர் வாக்களிக்கவில்லை.

Tags :
|