Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கான நிகழ்ச்சி அட்டவணை

நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கான நிகழ்ச்சி அட்டவணை

By: Nagaraj Sat, 27 May 2023 11:33:18 PM

நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கான நிகழ்ச்சி அட்டவணை

புதுடில்லி:திறப்பு விழா அட்டவணை... நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவுக்கான நிகழ்ச்சி அட்டவணை வெளியாகிவுள்ளது. அதன்படி, காலை 7.15 மணிக்கு பிரதமர் மோடி நாடாளுமன்ற புதிய கட்டிடத்திற்கு வருகை தருகிறார்.

காலை 7.30 மணிக்கு தொடங்கி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மங்கள சடங்குகளும், பூஜைகளும் நடைபெறுகின்றன. 8.30 மணிக்கு பிரதமர் மோடி மக்களவை அறைக்கு வருகை தருகிறார். 9 மணிக்கு சபாநாயகர் இருக்கைக்கு அருகே தமிழகத்தின் வரலாற்றுச் செங்கோல் நிறுவப்படுகிறது. காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றத்தின் முகப்பறையில் பிரார்த்தனை கூட்டம் நடைபெறுகிறது.

சிறிது இடைவேளைக்குப் பின் காலை 11.30 மணிக்கு விருந்தினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை தருகின்றனர். நண்பகல் 12 மணிக்கு பிரதமர் மோடி மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த பிறகு தேசிய கீதத்துடன் சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.

பிற்பகல் 1.05 மணிக்கு 75 ரூபாய் சிறப்பு நாணயத்தை வெளியிடும் பிரதமர், 1.10 மணிக்கு உரை நிகழ்த்துகிறார். பிற்பகல் 2 மணிக்கு விழா நிறைவு பெறுகிறது.

parliament,attendance,schedule,afternoon,closing,speech ,நாடாளுமன்றம், வருகை, அட்டவணை, பிற்பகல், நிறைவு, உரை

Tags :