Advertisement

போதை தடுப்பு பிரிவை மாற்றும் முயற்சியில் முன்னேற்றம்

By: Nagaraj Thu, 28 July 2022 10:04:40 AM

போதை தடுப்பு பிரிவை மாற்றும் முயற்சியில் முன்னேற்றம்

புதுடில்லி: அமித் ஷா முயற்சியில் முன்னேற்றம்... மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவை, உள்துறை அமைச்சகத்துக்கு மாற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறையின் கீழ் உள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில், இந்தப் பிரிவை, உள்துறை அமைச்சகத்தின் கீழ் மாற்ற வேண்டும் என, பா.ஜ., மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா தொடர்ந்து கூறி வருகிறார்.

Tags :
|
|