Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவை போல டிக்டாக் போன்ற செயலிகளை தடை செய்ய வேண்டும் - அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்

இந்தியாவை போல டிக்டாக் போன்ற செயலிகளை தடை செய்ய வேண்டும் - அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்

By: Karunakaran Thu, 16 July 2020 6:17:36 PM

இந்தியாவை போல டிக்டாக் போன்ற செயலிகளை தடை செய்ய வேண்டும் - அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம்

கடந்த மாதம் 15-ஆம் தேதி லடாக் பகுதியில் இந்திய-சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதலுக்கு பின், இந்திய அரசு 59 சீன செயலிகளை தடை விதித்தது. இந்நிலையில் டிக்டாக் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி அமெரிக்கர்களின் தகவல்கள் எளிதாக சீனா திருடப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் 25 எம்.பி.க்கள் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அமெரிக்காவின் 25 எம்.பி.க்கள் அதிபர் டிரம்புக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில், அதிநவீன உளவு பார்க்கும் கருவியாக டிக்டாக் உள்ளிட்ட செயலிகளை சீனா பயன்படுத்தி வருகிறது. இந்த செயலிகளின் மூலம் அமெரிக்கர்களின் தகவல்கள் எளிதாக திருடப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.

tiktok,india,us mps,trump ,டிக்டோக், இந்தியா, அமெரிக்க எம்.பி.க்கள், டிரம்ப்

நாட்டின் பாதுகாப்பு கருதி இந்தியாவில் டிக் டாக் உள்ளிட்ட 60 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை உதாரணமாகக் கொண்டு அமெரிக்க அரசும் செயல்பட வேண்டும். அமெரிக்க மக்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்க தீர்க்கமான நடவடிக்கையை அதிபர் எடுக்க அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்கர்களின் தரவு, தனியுரிமை அல்லது பாதுகாப்பைப் பாதுகாக்க டிக்டாக் அல்லது சீனாடன் இணைந்த சமூக ஊடக வலைத்தளங்கள் அல்லது பயன்பாடுகளை அமெரிக்கா நம்பக்கூடாது எனவும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிநவீன உளவு பிரச்சாரத்தை நிறுத்தவும், நமது தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்கவும் வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|
|