Advertisement

இதற்கு அருகே 5ஜி சிக்னல் கோபுரங்கள் அமைக்க தடை

By: vaithegi Thu, 01 Dec 2022 10:56:02 AM

இதற்கு அருகே  5ஜி சிக்னல் கோபுரங்கள் அமைக்க தடை

புதுடெல்லி: இந்தியாவில் 5ஜி சேவையை கடந்த அக்டோபர் 1-ந்தேதி பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்தார். இதனையடுத்து குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அமலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் படிப்படியாக நாடு முழுவதும் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சேவை வழங்கக் கூடாது என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைத்தொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது. விமான கருவிகள் பாதிக்கப்படும் என்பதால் விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சிக்னல் கோபுரங்கள் அமைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

5g,central department of telecom ,  5ஜி,மத்திய தொலைத்தொடர்புத்துறை

இதனை அடுத்து இது தொடர்பாக தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், விமான நிலையங்களின் ஓடுபாதையின் இருபுரங்களிலும் 2,100 மீட்டர் தூரத்திற்கும்,

மேலும் ஓடுபாதையின் மத்திய பகுதியில் இருந்து 910 மீட்டர் தூரத்திற்கும் இடையே 3,300 முதல் 3,670 மெகா ஹெர்ட்ஸ் வரையிலான அலைவரிசையைக் கொண்ட 5ஜி சிக்னல் கோபுரங்கள் அமைக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|