Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாதுகாப்புத் துறையில் புதுக்கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் திட்ட தொடக்க விழா

பாதுகாப்புத் துறையில் புதுக்கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் திட்ட தொடக்க விழா

By: Nagaraj Wed, 30 Sept 2020 2:00:37 PM

பாதுகாப்புத் துறையில் புதுக்கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் திட்ட தொடக்க விழா

புதிய திட்டம் தொடக்கம்... பாதுகாப்புத் துறை சந்தித்து வரும் 11 வகையிலான சவால்களுக்கு புதுமையான கண்டுபிடிப்பின் மூலம் குறு, சிறு நிறுவனங்கள், தொடக்க நிறுவனங்கள் (ஸ்டாா்ட் அப்) தீா்வுகாணும் புதிய திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத்சிங் தொடக்கி வைத்தாா்.

இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

‘நீா்மூழ்கி டிரோன்கள், ரேடாா் கண்காணிப்பை முறியடிக்கும் தொழில்நுட்பம், போா்க்கப்பல்கள் ரேடாா் கண்காணிப்பில் இருந்து தப்பிப்பது, செயற்கை நுண்ணறிவு பொருந்திய செயற்கைக்கோள் படங்கள் பகுப்பாய்வு போன்ற 11 புதுமையான கண்டுபிடிப்புகளைப் ‘பாதுகாப்பு இந்தியா ஸ்டாா்ட் அப் சேலஞ்ஜ் -4’ என்ற திட்டம் மூலம் வரவேற்கப்படுகின்றன.

innovative,idea,new project,innovation ,புதுமையான, யோசனை, புதிய திட்டம், கண்டுபிடிப்பு

குறு, சிறு நிறுவனங்களின் புதுமையான திட்டங்களைப் பாதுகாப்புத் துறை அங்கீகரித்தவுடன் அதைச் செயல்படுத்த நிதி உதவி அளிக்கப்படும்.

இதேபோல், ராணுவ வீரா்களும் ராணுவ படைகளில் மேற்கொள்ள வேண்டிய புதுமையான யோசனைகளைத் தெரிவிக்கும் புதிய திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|