Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான திட்ட அறிக்கை ... மெட்ரோ நிர்வாகம் தொடக்கம்

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான திட்ட அறிக்கை ... மெட்ரோ நிர்வாகம் தொடக்கம்

By: vaithegi Sat, 18 Feb 2023 1:24:19 PM

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான திட்ட அறிக்கை  ...  மெட்ரோ நிர்வாகம் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் தற்போது சென்னையில் மட்டுமே மெட்ரோ ரயில் சேவை உள்ளது. மெட்ரோ ரயில் சேவையால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து கொண்டு வருகின்றனர்.

சென்னைக்கு அடுத்தக்கட்டமாக கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. எனவே அதற்கான திட்டபணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

அதவகையில் மதுரையில் ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்திய கூறு ஆய்வு அறிக்கையை மட்டும் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

metro administration,madurai , மெட்ரோ நிர்வாகம்,மதுரை

இந்த நிலையில் மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியது. விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான டெண்டர் கோரியது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்.

ரூ.3 கோடி செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதையடுத்து 120 நாட்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags :