Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வங்கதேசத்தில் குழாய் மூலம் எரிபொருளை கொண்டு செல்ல திட்டம்

வங்கதேசத்தில் குழாய் மூலம் எரிபொருளை கொண்டு செல்ல திட்டம்

By: Nagaraj Mon, 09 Jan 2023 11:44:18 PM

வங்கதேசத்தில் குழாய் மூலம் எரிபொருளை கொண்டு செல்ல திட்டம்

கவுகாத்தி: வங்கதேசத்தில் குழாய் மூலம் எரிபொருளை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நல்ல நட்புறவு உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள அசாம் நுமாலிகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மார்க்கெட்டிங் டெர்மினலில் இருந்து வங்கதேசத்தின் பார்பதிபூரில் உள்ள வங்கதேச பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு குழாய் மூலம் எரிபொருளை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

bangladesh,guwahati,india,numalikar oil refinery ,, இந்தியா, கவுகாத்தி, நுமாலிகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், பங்களாதேஷ்

இதற்காக 130 கி.மீ. தொலைவில் இந்த இந்திய, வங்காளதேச நட்புறவு குழாய்வழி (ஐபிஎப்பிஎல்), ரூ.377.08 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் நிதியுதவியுடன் இந்த இருதரப்பு திட்டத்தின் பொறியியல் பணிகள் கடந்த மாதம் 12ம் தேதி நிறைவடைந்தது.

இந்நிலையில் இந்த பைப்லைன் எரிபொருள் விநியோக திட்டத்தை அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக நுமலிகார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


Tags :
|