Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் 7 மாநிலங்களில் இழுபறி நீடிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் 7 மாநிலங்களில் இழுபறி நீடிப்பு

By: Karunakaran Wed, 04 Nov 2020 5:28:07 PM

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் 7 மாநிலங்களில் இழுபறி நீடிப்பு


அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை வெளியான வாக்குப்பதிவு எண்ணிக்கையில், எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிக வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இருப்பினும் அவரை விட டிரம்ப் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி உள்ளார்.

அதிபரை தேர்வு செய்ய மொத்தம் உள்ள 50 மாநிலங்களில் 538 தேர்வாளர்கள் உள்ளனர். இவர்களில் 270 பேரின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அமெரிக்க அதிபராக தேர்வாக முடியும். தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 238 வாக்குகளும், குடியரசு கட்சி வேடபாளர் டிரம்ப் 213 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

america,7 states,presidential election,trump ,அமெரிக்கா, 7 மாநிலங்கள், ஜனாதிபதித் தேர்தல், டிரம்ப்

ஜோபிடன் முன்னிலை பெற்றிருந்தாலும் இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் குறைந்த அளவிலேயே உள்ளது. அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்ஸில்வேனியா, விஸ்கான்ஸின் ஆகிய 7 மாநிலங்களில் இழுபறி நீடிக்கிறது.

இழுபறியில் உள்ள அரிசோனா, நெவாடா ஆகிய 2 மாநிலங்களில் பைடன் முன்னிலையில் உள்ளார். ஜார்ஜியா, மிச்சிகன், வட கரோலினா, பென்ஸில்வேனியா, விஸ்கான்ஸின் ஆகிய 5 மாநிலங்களில் டிரம்ப் முன்னிலையில் இருக்கிறார். இந்த மாநிலங்களில் முடிவுகள் வெளிவருவதில் தாதமம் ஏற்பட்டுள்ளது. இந்த மாநிங்கள் தான் இறுதி வெற்றியை நிர்ணயிக்கயுள்ளன.

Tags :