Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டும் கல்வி உதவித்தொகை இரட்டிப்பு .. அரசாணை வெளியீடு

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டும் கல்வி உதவித்தொகை இரட்டிப்பு .. அரசாணை வெளியீடு

By: vaithegi Fri, 18 Aug 2023 5:02:11 PM

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டும் கல்வி உதவித்தொகை இரட்டிப்பு .. அரசாணை வெளியீடு


சென்னை: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பு ...தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் என்று பல்வேறு தகுதி அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை 2 மடங்காக அதிகரிக்கப்படும் என கடந்த 1 மாதத்திற்கு முன்பு தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இந்த கல்வி உதவித் தொகைக்காக ரூ. 14.90 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், தற்போது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்த தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

ordinance,disabled ,அரசாணை ,மாற்றுத்திறனாளி

கல்வி உதவித் தொகையாக குறைந்தபட்சமாக மாணவர்களுக்கு ரூ. 72,000 முதல் 7 லட்சத்து 14,000 வரை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழக அரசின் இந்த புதிய திட்டத்தின் மூலமாக திட்டத்திட்ட 22,300 மாணவர்கள் பயன்பெறலாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

அதாவது, 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.2000 வழங்கப்படும் என்றும், 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ. 6000 வழங்கப்படும். 9-ம் முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ. 8000மும், பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ. 12000மும், தொழில் கல்வி மற்றும் முதுகலை பட்டம் பெறும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ. 14,000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.


Tags :