Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை மாநகராட்சியில் கடந்த 15 நாட்களில் ரூ.290 கோடி சொத்து வரி வசூல்

சென்னை மாநகராட்சியில் கடந்த 15 நாட்களில் ரூ.290 கோடி சொத்து வரி வசூல்

By: vaithegi Mon, 17 Apr 2023 3:08:44 PM

சென்னை மாநகராட்சியில் கடந்த 15 நாட்களில் ரூ.290 கோடி சொத்து வரி வசூல்

சென்னை : 15 நாட்களில் ரூ.290 கோடி சொத்து வரி வசூல் ... சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாய் இனங்களில் சொத்துவரி முக்கிய பங்கு வகிக்கிறது. இதையடுத்து ஆண்டுக்கு ரூ.1500 கோடிக்கு மேல் சொத்து வரிவசூலிக்கப்படுகிறது. சொத்து வரியை ஒவ்வொரு அரையாண்டிலும், முதல் 15 நாட்களுக்குள்,

அதாவது ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் 15-ஆம் தேதிக்குள் அரையாண்டுக்கான சொத்துவரியை செலுத்த வேண்டும். இதனை அடுத்து அவ்வாறு செலுத்துவோருக்கு 5 சதவீத ஊக்கத் தொகை, அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

property tax,chennai corporation ,சொத்து வரி,சென்னை மாநகராட்சி


சொத்துவரியை, சொத்து உரிமையாளர்கள் செலுத்த மாநகராட்சி சார்பில் பல வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு கொண்டு வருகின்றது. பொதுமக்கள் சொத்து வரியை எளிதாக செலுத்த கடந்த 8, 9 ஆகிய தேதிகளில் வார விடுமுறை நாட்களில் தலா 170 இடங்களில் சொத்து வரி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

இதையடுத்து அதில் சுமார் ரூ.18 கோடிக்கு மேல் சொத்துவரி வசூலிக்கப்பட்டது. மேலும் நடப்பு அரையாண்டில் 5 சதவீத ஊக்கத்தொகை பெறுவதற்கான அவகாசம் கடந்த 15-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த 15 நாட்களில் மொத்தம் ரூ.290கோடி சொத்துவரி வசூலிக்கப்பட்டுள்ளது.

Tags :