Advertisement

பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு வெளியீடு

By: Karunakaran Fri, 16 Oct 2020 2:56:45 PM

பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு வெளியீடு

பிரதமர் நரேந்திர மோடி தனது சொத்து பட்டியலை பிரதமர் அலுவலகத்திடம் அளித்துள்ளார். அதில், பிரதமர் நரேந்திர மோடியின் நிகரச்சொத்து மதிப்பு ஜூன் 30-ந்தேதி நிலவரப்படி ரூ.2 கோடியே 85 லட்சம் ஆகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் ரூ.36 லட்சம் அதிகம் ஆகும். பாதுகாப்பான முதலீடுகளின் வருமானம் காரணமாக மோடியின் நிகரச்சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.

பிரதமர் மோடியிடம் நடப்பு ஆண்டு ஜூன் 30-ந்தேதி நிலவரப்படி கையிருப்பு ரூ.31 ஆயிரத்து 450 ஆகும். குஜராத் மாநிலம், காந்திநகர் என்.எஸ்.சி. பாரத ஸ்டேட் வங்கி கிளையில் இருப்பு ரூ.3 லட்சத்து 38 ஆயிரத்து 173. அதே வங்கி கிளையில் ரூ.1 கோடியே 60 லட்சத்து 28 ஆயிரத்து 939-க்கு நிலைத்த வைப்பு , பல்வாய்ப்பு வைப்பு சேமிப்பும் வைத்துள்ளார். பிரதமர் மோடி ரூ.1½ லட்சம் மதிப்பிலான 4 தங்க மோதிரங்கள் (எடை சுமார் 45 கிராம்) வைத்திருக்கிறார்.

property value,prime minister,narendra modi,india ,சொத்து மதிப்பு, பிரதமர், நரேந்திர மோடி, இந்தியா

பிரதமர் மோடி ரூ.8 லட்சத்து 43 ஆயிரத்து 124 மதிப்புள்ள தேசிய சேமிப்பு பத்திரங்கள், ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 957 மதிப்பிலான ஆயுள் காப்பீட்டு பாலிசிகள், ரூ.20 ஆயிரம் வரி சேமிப்பு உள்கட்டமைப்பு பத்திரங்கள், ரூ.1 கோடியே 75 லட்சத்துக்கு சற்று அதிகமான அசையும் சொத்துகள் வைத்துள்ளார். குஜராத் காந்திநகரில் செக்டார் 1-ல் 3,531 சதுர அடி நிலத்தை பிரதமர் மோடி கூட்டாக வைத்துள்ளார். இந்த சொத்துக்கு மேலும் 3 கூட்டாளிகள் உள்ளனர். மொத்தத்தில் 4 பேருக்கும் தலா 25 சதவீதம் பங்கு உள்ளது.

மோடியின் சொத்து பட்டியலில் இடம்பெற்றிருக்கிற சொத்து, அவர் குஜராத் முதல்-மந்திரியாக பதவி ஏற்பதற்கு 2 மாதங்கள் முன்பாக (2002, அக்டோபர் 25-ந்தேதி) வாங்கப்பட்டதாகும். அப்போது இந்த சொத்தின் விலை ரூ.1.3 லட்சம் ஆகும். தற்போது மோடியின் சொத்து அல்லது அசையா சொத்துகளின் இன்றைய சந்தை மதிப்பு ரூ.1 கோடியே 10 லட்சம் ஆகும்.

Tags :