Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மராட்டிய சட்டசபை வளாகத்தில் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

மராட்டிய சட்டசபை வளாகத்தில் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

By: Nagaraj Fri, 03 Mar 2023 9:52:20 PM

மராட்டிய சட்டசபை வளாகத்தில் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

மும்பை: சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு... மராட்டிய சட்டசபை வளாகத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலையில் நேற்று முன்தினம் எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக ரூ.50 உயர்த்தியது.

இதுபோல வணிக சிலிண்டர் விலையும் ஒரேயடியாக ரூ.350 அதிகரித்துள்ளது. இது சாமானிய மக்களுக்கு சுமையாக மாறி உள்ளது. இந்த நிலையில் இந்த விலை உயர்வை கண்டித்து பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும் சட்டசபை வளாகத்திற்கு வெளியே நேற்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.

தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சிகளை உள்ளடக்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சியினர் சட்டசபை வளாக படிக்கட்டில் நின்றபடி கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

commercial,congress,premises,price, ,எதிர்க்கட்சி, கியாஸ், கோஷம், விலை

இதுகுறித்து அவர்கள் கூறியது விலைவாசி உயர்வு சாமானிய மக்களை கடுமையாக பாதித்துள்ளது. இந்த அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து சாமானிய மனிதர்களின் வீட்டு வரவு- செலவு திட்டங்கள் சிதைந்துவிட்டன.

உஜ்வாலா திட்டத்தில் இல்லாத பெரும்பாலான நபர்களுக்கு அரசு கியாஸ் மானியத்தை செலுத்துவதில்லை. இதனால் அவர்கள் தொகையையும் செலுத்தி புதிய கியாஸ் சிலிண்டர் பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக கியாஸ் சிலிண்டர் இணைப்புபெற்ற ஏழைகளுக்கு 9.58 கோடி அரசு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் செலுத்துகிறது. அவர்களும் சிலிண்டர் வாங்க ரூ.903 வரை செலுத்த வேண்டி உள்ளது. அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Tags :
|