Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெர்மனியில் போராட்டம்

கொரோனா கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெர்மனியில் போராட்டம்

By: Karunakaran Sun, 30 Aug 2020 6:47:07 PM

கொரோனா கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெர்மனியில் போராட்டம்

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. தற்போது உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.50 கோடியைத் தாண்டியுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் தீவிர கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளன. இதனால் சில நாடுகளில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. தற்போது படிபடிப்பாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட வரும் நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

protest,germany,corona prevention,arrest ,எதிர்ப்பு, ஜெர்மனி, கொரோனா தடுப்பு, கைது

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர ஜெர்மனி தடுப்பு நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 38 ஆயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தை நோக்கி புறப்பட முயன்ற போராட்டக்காரர்களை போலீசார்கள் தடுத்து நிறுத்தியுடன் 300 பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டது அவமானம், ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அரசியல்கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்கள தெரிவித்துள்ளனர். இதேபோல், கொரோனா நடவடிக்கைகளை எதிர்த்து பாரிஸ், வியன்னா, சுரிச் நகரங்களிலும் போராட்டம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :