Advertisement

பிரான்ஸ் பிரதமருக்கு எதிராக லண்டனில் போராட்டம்

By: Nagaraj Sat, 31 Oct 2020 7:11:35 PM

பிரான்ஸ் பிரதமருக்கு எதிராக லண்டனில் போராட்டம்

பிரான்ஸ் பிரதமருக்கு எதிராக லண்டனில் நடந்த போராட்டத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சார்லி ஹெப்டோ கார்ட்டூன்கள் குறித்த இமானுவேல் மேக்ரோனின் நிலைப்பாடு தொடர்பாக பிரெஞ்சு தூதரகத்திற்கு வெளியே லண்டனில் 'நபி மரியாதை' கோரி இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர் களுக்குமிடையே மோதல் வெடித்தது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

'எங்கள் அன்பான தீர்க்கதரிசியை அவமதிப்பதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்', 'பூமியின் மிகப்பெரிய பயங்கரவாதி மேக்ரோன்' மற்றும் 'அவமதிப்பு பேச்சு சுதந்திரமாகாது' என்ற பதாகைகளை ஏந்தியவாறு இஸ்லாமியர்கள் பரவலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

prime minister of france,protest,3 arrested,london ,பிரான்ஸ் பிரதமர், போராட்டம், 3 பேர் கைது, லண்டன்

இஸ்லாமியர்கள் புனிதரான நபிகள் நாயகத்தினை கேலிச்சித்திரமாக சித்தரித்ததன் விளைவாக தொடங்கிய பிரச்னை சமீபத்தில் பிரான்ஸின் நீஸ் (NICE) நகரில் மூன்று பேர் ஆயுதம் தாக்கிய நபர் தொடுத்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இஸ்லாமிய வன்முறைக்கு முற்றுப்புள்ளி தேவையென அந்நாட்டு பிரதமர் கூறியிருந்ததும், சார்லி ஹெப்டோ கார்ட்டூன்கள் குறித்து அவரின் நிலைப்பாடு தொடர்பாகவும் பல்வேறு நாடுகளில் இஸ்லாமிய சமூக மக்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக லண்டனில் நடைபெற்ற போராட்டத்தில், பிரான் பிரதமரை பேயாக சித்தரித்தும், அவரது புகைப்படத்தில் பூட்ஸ் அடிச்சுவடு பதிவிட்டிருப்பதைப்போலவும் படங்களை கைகளில் ஏந்தி அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் அமைதியாக கலைந்து சென்ற நிலையில் மூவர் மட்டும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

13 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கின்றது. இதைத் தொடர்ந்து ஆப்கான், இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியாவில் மேக்ரோன் உருவப்படங்களை அவமதித்து போராட்டங்கள் நடைபெற்றன.

Tags :